search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தவாசி விஷ்ணு சிலை"

    வந்தவாசியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கெரகோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த பெருமாள் சிலை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி ஆகிய ஊர்கள் வழியாக கிருஷ்ணகிரியை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளிக்கு வந்தது. அந்த பகுதியில் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றை பெருமாள் சிலை கடந்து செல்லமுடியாததால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெருமாள் சிலை ஆற்றை கடந்து செல்வதற்காக அந்த பகுதியில் தற்காலிகமாக மண்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மண்சாலை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து குறைந்ததும், மீண்டும் மண்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று மண் சாலை அமைத்து ஆற்றில் இருந்து நீர்வரத்து குழாய் மூலம் செல்ல ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் 4 ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மண்சாலை அமைக்கப்பட்டது. இரவு பேரண்டப்பள்ளியில் இருந்து பெருமாள் சிலை புறப்பட்டு மண்சாலையை கடந்து சென்றது.

    கடந்த 13 நாட்களுக்கு பிறகு மண்சாலை அமைக்கப்பட்டு பேரண்டபள்ளியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை இன்று காலை ஓசூர் நகர பகுதி வழியாக வந்து ஓசூர் பஸ் நிலையம் அருகே வந்தது.

    இதைத்தொடர்ந்து ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி வழியாக தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை இன்று காலை 9 மணியளவில் சென்றடைந்தது.

    லாரியின் மூலம் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. கடந்த 6 மாத காலமாக அந்த பெருமாள் சிலை பெங்களூருவுக்கு செல்வதற்குள் லாரியின் டயர்கள் பலமுறை பஞ்சராகியும், வண்டியின் உதிரிபாகங்கள் பழுதாகியும் தடைகள் ஏற்பட்டது.

    இதேபோன்று வழிநெடுக செல்வதற்கான உரிய பாதைகள் இல்லாததால் சில இடங்களில் வழித்தடத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டும், சில இடங்களில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டும் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு சிலை ஓசூர் அருகே பேரண்ட பள்ளி வந்ததது. அங்கு தென்பெண்ணையாற்றை கடக்க முடியாமல் மண் சாலை அமைப்பதற்கு கடந்த 13 நாட்களாக சிலை அங்கேயே நிறுத்தி வைத்து வழிதடங்கள் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று காலை தமிழக-கர்நாடக எல்லைக்குள் சென்று அடைந்தது. அப்போது வழிநெடுக பெருமாள் சிலையை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
    கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் பெருமாள் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது.

    இந்த பெருமாள் சிலையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லை எடுத்து வடிவமைக்கப்பட்டது. இந்த பெருமாள் சிலையின் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருக்கு லாரி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால் சிலையின் எடை அதிகம் என்பதால் இந்த சிலை பாலங்களை கடக்க தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கவில்லை. இதனால் பாலங்கள் அருகே தற்காலிக மண்பாதை அமைத்து இந்த சிலை ஓசூருக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடக எல்லையான ஓசூர் அருகே உள்ள பேரண்டப் பள்ளிக்கு இந்த பெருமாள் சிலை வந்துவிட்டது.

    ஆனால் இந்த லாரி அங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்தால் மட்டுமே பெங்களூருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி தரவில்லை என்பதால் ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால் ஆற்றின் குறுக்கே பாதை அமைத்தால் தங்களுக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாதையின் கீழே தண்ணீர் போக குழாய் அமைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே மண்பாதை அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத இந்த பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    மண் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று 10-வது நாளாக பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை அந்த பகுதியில் செல்பவர்கள் திரளாக வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைந்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி பிறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரியை கடந்து வந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது. அங்குள்ள சிறுபாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

    இப்பகுதியை கடக்கும் பட்சத்தில் சுமார் 2 கி.மீ தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு பாலங்கள் உள்ளன. இதனை தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையையொட்டி வனப்பகுதி மார்க்கத்தை சிலை பயணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து சாலை மார்க்கமாகவே சிலை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் சாமல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலையை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சுமார் 4 மாத காலமாகியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாமல் ஏற்பாட்டாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஏற்கனவே வழியில் பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக பெருமாள் சிலை நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிலை பயணத்திற்கு வசதியாக பேரண்டப்பள்ளி என்னும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். மேலும் குழாய்களை பதித்து அதற்கு மேல் மண் கொட்டி தற்காலிகமாக பாலம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் சாமல்பள்ளத்தில் இருந்து பிரமாண்ட பெருமாள் சிலை புறப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    ஒரே கல்லால் ஆன 380 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையைக் கொண்டு செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியிலுள்ள ரவுண்டான இடிக்கப்பட்டது.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு, தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம பெருமாள் கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம பெருமாள், வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோதண்டராம பெருமாள் கோவிலில், ஒரே கல்லில், 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் உடைய விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை மற்றும் 7 தலை பாம்புகளுடன் ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் கல் வெட்டும் பணி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கோதண்டராம பெருமாள் சாமி சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல்லும், ஆதிசேஷன் சிலை செய்ய 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

    வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள், பெங்களூருவில் செதுக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஒரு கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் அமைந்துள்ள 380 டன் எடையில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலையை, பெங்களூருவுக்கு பெரிய லாரி மூலம் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி, கொரக்கோட்டை கிராமத்திலுள்ள குன்றில் இருந்து, விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை 240 டயர்களை உடைய ராட்சத லாரியில் ஏற்றப்பட்டது.

    இந்த லாரி செல்லும் வழியில் தடையாக உள்ள சில கடைகளை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த பெருமாள் சிலையுடன் லாரி கடந்த 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் அந்த லாரி சிலையுடன் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை தரைப்பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பாலத்தை கடக்க கூடுதலாக லாரி தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஊத்தங்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.


    இந்த நிலையில் சிலையை கொண்டு வருவதற்காக அந்த பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் பாம்பாறு அணை பாலம் பழுதடைந்து இருந்ததால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேலும்  ஊத்தங்கரை ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து 7 நாட்களுக்கு பிறகு அந்த லாரி நேற்று ஊத்தங்கரை பாம்பாறு பாலத்தை கடந்து புறப்பட்டு சென்றது.

    அந்த லாரியில் இருந்த பெருமாள் சிலையை பக்தர்கள் வணங்கியவாறு வழி அனுப்பி வைத்தனர். அந்த லாரி ஊத்தங்கரை நகர் வழியாக நேற்று கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சென்றது. லாரி புலியூர் கூட்டு ரோடு வழியாக கிருஷ்ணகிரி செல்ல உள்ளது. தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அந்த லாரியை இயக்க முடியும் என்பதால் கிருஷ்ணகிரிக்கு இன்னும் 4 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கிருஷ்ணகிரியை கடந்து ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு இந்த மாத இறுதிக்குள் விஸ்வரூப கோதண்டராம சாமி சிலையை எடுத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×